என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இயக்குனர் விஜய்
நீங்கள் தேடியது "இயக்குனர் விஜய்"
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் குறித்து பேசியுள்ளார். #GVPrakash
ஜிவி.பிரகாஷ் நடிப்பில் இந்த அண்டு, சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன.
குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகி விட்ட ஜிவி.பிரகாஷின் குழந்தை ரசிகர்களை கவரும் வகையில் ’வாட்ச்மேன்’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் புருனோ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நாய் இடம்பெறும் சாகச காட்சிகளை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் என்பதாலேயே கோடைக் கொண்டாட்டமாக வரும் 12-ம்தேதி ரிலீசாக இருக்கிறது.
இப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, வாட்ச்மேன் படம் காமெடியுடன் கூடிய திரில்லர். தண்ணீர் கேன் போடும் பையனான நான் இரவில் ஒரு வீட்டுக்குள் போகிறேன். அந்த பங்களாவில் இருப்பவர்கள், நடக்கும் சம்பவங்களை கொண்டு படம் நகரும். புருனோ என்ற நாய் படம் முழுக்க வரும். அது செய்யும் சாகசங்கள் பிரமிக்க வைக்கும்.
நாய்க்கு பயப்படும் ஒருவன் நாயுடனே இரவு முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான். அந்த நாய் அவனை காப்பாற்ற தான் முயற்சி செய்கிறது. ஆனால் அவனோ அந்த நாயை பார்த்து மிரள்கிறான். இப்படித்தான் கதை போகும். என்னை காப்பாற்ற நாய் செய்யும் செயல்களை குழந்தைகள் கைதட்டி ரசிப்பார்கள். அந்த நாயுடன் சுமார் 40 நாட்கள் நடித்தேன். நாய் குழந்தைகள் போலத்தான். அவற்றை அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. அவற்றின் போக்கில் சென்றுதான் படம் பிடிக்க வேண்டும். புருனோவை நண்பனாக்கி கொண்டேன். இருந்தாலும் சில சமயம் முறைக்கும். பயமாக இருக்கும்’ என்றார்.
ஜி.வி.பிரகாஷின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை என்று இயக்குனர் விஜய், வாட்ச்மேன் படம் பற்றி கூறியிருக்கிறார். #Watchman #Vijay
விஜய் வெவ்வேறு வகையிலான முயற்சிகளை செய்தாலும், அது வெறும் சோதனைகளாக மட்டும் நின்று விடாமல், அவரது திறமையை பறைசாற்றுகிறது. திரில்லர், வரலாற்று காதல் படம், நகைச்சுவை படங்கள் என வித்தியாசமான படங்களை கொடுத்த அவர், 'வாட்ச்மேன்' மூலம் புதிய ஒரு களத்தில் தனது திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்படம் குறித்து விஜய் கூறும்போது, "துல்லியமாக சொல்வதென்றால், என் ஆரம்ப கட்டத்தில் இருந்தே வேறு வேறு வகையிலான திரைப்படங்களை உருவாக்க நான் முயற்சிக்கிறேன். பிரபலமான ஒரு ஹீரோவுடன் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு திரில்லர் படத்தை எடுக்கும் எண்ணம் எனக்கு இருந்தது. அது தான் இந்த படம் உருவாக ஒரு விதையாக இருந்தது. படத்தின் தலைப்பை வைத்தே படம் எந்த மாதிரியான படம் என்பதை ரசிகர்கள் யூகித்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். 2 நாட்களில் நடக்கும் இந்த திரில்லர் கதையில் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் வகையில் திரைக்கதை இருக்கும்" என்றார்.
ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நாயகனாக நடிப்பதை பற்றி விஜய் கூறும்போது, "நானும், ஜி.வி.பிரகாஷும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வருகிறோம், கிட்டத்தட்ட 11 படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அவருடைய இசை மிகச்சிறப்பாக இருக்கும். பாலா சார் இயக்கிய நாச்சியார் படத்தில் அவரை பார்த்து வியந்தேன். அவரை தவிர இந்த கதாபாத்திரத்துக்கு யாரையும் யோசிக்க முடியவில்லை. இந்த படத்திற்காக அவர் மிகவும் கடுமையான உழைத்தார். நிறைய ரிஸ்க் எடுத்தார். குறிப்பாக, ஒரு நாய் உடன் இணைந்து நடிக்க பொறுமை தேவை, ஜி.வி.பிரகாஷின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை" என்றார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்தின் பின்னணி இசைக்காக புதிய பாணியை முயற்சித்துள்ளார். அவரது விளம்பரப் பாடல் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளது. நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி ஆகியோர் ஒளிப்பதிவில், அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படம், வரும் ஏப்ரல் 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் தமன்னாவை இயக்குனர் விஜய் பாராட்டியுள்ளார். #Tamannah #Vijay
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியான படம் தேவி. இதில் தமன்னா சிறப்பாக நடித்து விமர்சனங்களில் பெயர் எடுத்தார். முக்கியமாக 2 பாடல்களுக்கு தமன்னா ஆடிய டான்ஸ் பாராட்டுகளை குவித்தது.
தேவி படத்தின் தொடர்ச்சியாக தேவி 2 உருவாகி வருகிறது. மொரிஷியசில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் தமன்னா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. சென்னை திரும்பிய தமன்னாவை விஜய், பிரபுதேவா உள்ளிட்ட படக்குழு வாழ்த்தி அனுப்பியுள்ளது.
இந்த படத்திலும் தமன்னா சிறப்பாக நடித்துள்ளார். அவரது கேரியரில் இது முக்கியமான படம்’ என்று விஜய் வாழ்த்தியுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X